இனி தரையில வாகனத்தில் பறக்க வேண்டாம்….. அந்தரத்துல கார்ல பறப்போம்…. அறிமுகம் செய்யப்பட்ட கேபிள் கார்…. வைரல் வீடியோ….!!!

பெங்களூருவில் முதன்முறையாக அந்தரத்தில் தொங்கும் கார் விடப்பட்டுள்ளது.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய சூழலில் தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மக்கள் அனைவருமே வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு தங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு என அனைத்துக்கும் வாகனங்கள் தேவைப்படுகின்றது.

   

பொதுவாக இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய பெரிய கார்கள் வரை உலா வருகின்றது. பெரும் நகரங்களில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் சாலைகளில் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெருநகரங்களில் அதாவது சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் மணிக்கணக்கில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு கண்டுபிடிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்தரத்தில் தொங்கும் கார்.  அதாவது ரோப் கார் என்று கூறுவார்கள். இதனை பெங்களூரு முதன்முதலில் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by RiggedIndian (@riggedindian)