நடிகர் ஆதியின் அம்மா மற்றும் அப்பாவை பாத்திருக்கீங்களா?… நீங்கள் இதுவரை பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படம்….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆதி. இவர் ஈரம், அய்யனார், ஆடு புலி ,அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

நடிகர் ஆதியும் நடிகை கல்ராணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.   யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இப்படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

தற்பொழுது நடிகர் ஆதியின் அம்மா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட இவர்கள்தான் நடிகர் ஆதியின் அம்மா, அப்பாவா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்….