‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் சந்திரமுகி கெட்டப் இது தானா?…  சந்திரமுகியே இவ்ளோ அழகா?… வைரலாகும் புகைப்படம் உள்ளே…

இயக்குனர்  பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான்  சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி தற்போது நிறைவடைந்துள்ளது . இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

   

‘சந்திரமுகி 2’  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தினை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், சந்திரமுகியாக நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கெட்டப்புக்காக மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சந்திரமுகியே இவ்ளோ அழகா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வைரல் புகைப்படங்கள்..