இதுவரை திருமணமே செய்து கொள்ளாத ‘குக் வித் கோமாளி 4’ காளையன்… ஓ அப்படியா?… காரணத்தை கேட்ட ஷாக் ஆயிடுவீங்க…

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பேராதரவை பெற்று தற்போது சீசன் 4 ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் காளையன். இவர் சுல்தான், ஜிகர்தண்டா என பல திரைப்படங்களில் நடித்து அசத்தியவர்.

   

தற்பொழுது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் காளையன் கோமாளிகளான புகழ், ஜி பி முத்து, குரேஷி போன்றவர்களை அடித்து உதைத்து செய்யும் காமெடிக்கென்றே ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளனர்.

இந்நிலையில் போட்டியாளர் காளையன் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இன்றைய எபிசோடில் காளையனிடம் சிவாங்கி, ‘நீங்கள் இளமையாக இருந்த போது ,உங்கள் பின்னால் பெண்கள் சுற்றினார்களா?’ எனக் கேட்கிறார். அதற்கு காளையன், ‘ஆம் ஆனால் யாரையும் நான் லவ் பண்ணல’ என்று கூறுகிறார்.

மேலும் ‘தற்பொழுது வரை தனக்கு திருமணமாகவில்லை’ என்று கூறிய காளையன், அதற்கு கூறிய காரணம்தான் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இவர் ஒரு பெண்ணை ஓகே செய்தால் அவருக்கு உடனே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விடுகிறதாம். இதனால் தான் தன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக இவர் கூறியுள்ளார். தற்பொழுது இதைக் கேட்ட சிவாங்கி மட்டுமல்ல, ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.