‘குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் முக்கிய போட்டியாளர்… அடடே இவரா?… இதை நாங்க எதிர்பாக்கலையே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.

   

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசன் வெற்றியாளராக கனியும், மூன்றாவது சீசன் வெற்றியாளராக ஸ்ருதிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த சீசனில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கி உள்ளனர்.

இவரை தொடர்ந்து இந்த சீசனில் குக்காக ‘வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரினும், ரஜினியுடன் முத்து திரைப்படத்தில் நடித்த நடிகை விசித்ராவும், நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகரான விஜே விஷால் மற்றும் சிவாங்கி போன்றோர் களமிறங்கி கலக்கி வருகின்றனர்.

இந்த 4வது சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேறியுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், வெளியேறப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் காளையன் தான் என்று வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.