வந்தா ஹெலிகாப்டருல தான் வருவேன்….. சொன்ன மாதிரியே செஞ்சுட்டாரே….. பத்துதல FDFS பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ்…. வேற லெவல் போங்க..!!!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு… அவர் தன் சிறு  வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

தற்போது சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகரும், சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் ஹெலிகாப்டருடன் வந்துள்ளார்.

பத்து தல இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்க, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் முதல் நாள் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது.   இதை ரசிகர்கள் தியேட்டர் முன் பட்டாசு வெடித்து மேல தாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.

இந்நிலையில் இதே போல் சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ் பத்து தல படத்தில் முதல் ஷோ பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என தெரிவித்து இருந்தார்.

தன் குடியிருக்கும் வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டியும்  கொடுத்திருந்தார். ஆனால் இன்று கையில் பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிக் கொண்டு பத்து தல படத்திற்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்துள்ளார்.

சென்னையில் உள்ள ரோகினி தியேட்டருக்குள் பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்த நடிகர் கூல் சுரேஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு,  இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.