திருமண கோலத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்..

சன் டிவியில் சூப்பர்  ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆனது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர்  மாரி முத்து மறைவினால்  சற்று டிஆர்பி யில்  பின் தங்கி இருந்தது  தற்போது டிஆர்பி யில் முன்னிலை அடைந்து வருகிறது.  இந்த சீரியலில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகை ஹரிப்ரியா.

   

இவர் கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிரியமானவளே .கண்மணி போன்ற பல சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஹரிப்பிரியா 2012 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு இடையே  கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

நடிகை ஹரிப்பிரியா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது திருமண கோலத்தில் பட்டுப் புடவை நகையுடன்  இருக்கும் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிவைரலாகி  வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Haripriya Isai (@haripriyaa_official)