இரண்டு பேருடன் இரவு விருந்து… நீலிமா ராணி வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்…

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி.  இவர் சின்னத்திரை நடிகையும் கூட , இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் உடன் நடித்த ‘தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும், போன்ற பல படத்திலும் நடித்துள்ளார்.இவர் 30 க்கு மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துள்ளார். நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நன்றாக  நடித்து  சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை  சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலில் ஓன்று

‘மெட்டி ஒலி’.இந்த  சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பெற்றார். சீரியலில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் .இவர் கோலங்கள், இதயம், தென்றல், அரண்மனைக்கிளி ,என் தோழி என் காதலி என் மனைவி, போன்ற சீரியல்களில்  நடித்துள்ளார்.50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களையும் நடித்துள்ளார். இவருக்கு  திருமணமாகி தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு மீண்டும்  சின்னத்திரை சீரியலில் வில்லியாக நடித்து தூள் கிளப்பினார்  நீலிமா. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தற்போது தன் தம்பி மற்றும் அம்மாவுடன் நேற்று இரவு டின்னர்  சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.