திரைப்படங்களில் வில்லனாக நாம் பார்த்து விரண்ட பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை மிகவும் நல்ல மனிதர்களாக வாழ்கிறார்கள். அந்த வகையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி தன் கண்களை தானம் செய்திருக்கிறார்.
அவருக்கு 48 வயது தான் ஆகிறது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் டேனியல் பாலாஜி இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.
அவர் மரணமடைந்த மூன்று மணி நேரங்களில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த புலசைவாக்கத்திற்கு அருகே இருக்கும் மருத்துவர்கள் அவரின் கண்களை தானம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தான் உடலால் மறைந்தாலும் தன் கண்கள் மூலமாக இந்த உலகத்தில் அவர் மறுபிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். டேனியல் பாலாஜிக்கு ரசிகர்கள் இணையதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகை நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.