அட இவர்கள்தான் இயக்குனர் அட்லீயின் அம்மா மற்றும் அப்பாவா?… முதன்முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு திரைப்படங்களிலும்  உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2013ல் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து ‘தெறி’ எனும் படத்தை இயக்கி தெறிக்க விட்டார். இதன்பின் மீண்டும் இரண்டு முறை விஜயுடன் இணைந்து மெர்சல், பிகில் என தொடர் வெற்றியை பெற்றார். இத்திரைப்படங்கள் தாறுமாறான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 54 வது பிறந்தநாள் அன்று தன் அடுத்த படத்தின் இயக்குனர் அட்லி என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பாலிவுட் திரை உலக முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார் . இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கோலிவுட்டில் கலக்கி விட்டு பாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் அட்லி.

இயக்குனர் அட்லீ 2014ல் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது இயக்குனர் அட்லியின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…