இளம் நடிகையை அடித்து டார்ச்சல் செய்த இயக்குனர் பாலா.. பின் நடிகை செய்த செயலால்.. விஸ்வரூபமான பிரச்சனை..!!

சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்களை வித்தியாசமாக எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். ஆனால் எந்த ஒரு படமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தே இல்லாமல், ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். அதனால் பாலா இயக்கும் ஒவ்வொரு படத்தையும், மக்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

   

ஆனால் படத்தின் சூட்டிங் சமயத்தில் பல நடிகை நடிகர்களை பாலா துன்புறுத்துவதாக பல செய்திகள் வெளியானது. அவ்வாறாக வணங்கான் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடித்து வந்தார். பின்னர், சில காரணங்களால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சூர்யா வெளியேறினார். இப்பொது அவருக்கு பதிலாக அருண் விஜய் நடித்து உள்ளார். சமீபத்தில், படத்திற்கான டீசரும் வெளியனாது.

மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இளம் மலையாள நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்தார். மமிதா சமீபத்தில், மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இவர் ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா பற்றி கூறியுள்ளதாவது, “வணங்கான் படத்தில் ஒரு காட்சியில் நான் டிரம்ஸ் மாதிரியான வாத்தியத்தை அடித்தபடி பாடிக் கொண்டே ஆடவேண்டும்.

அதற்காக எனக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை, அதனால் 3 டேக்குக்கு பிறகும் எனக்கு சரியாக வரவில்லை. இதனை எனக்கு பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இருந்த இயக்குனர் பாலா எனது தோள்பட்டையில் அடித்தார்” என்று நடிகை மமிதா பைஜூ கூறிஉள்ளார். இதோ வீடியோ,