புதிய தொழிலை தொடங்கிய இயக்குனர் ஹரி… இந்த தொழிலா?… வைரலாகும் திறப்பு விழா புகைப்படங்கள்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

கமர்ஷியல் படங்களை எடுப்பதில் புகழ்பெற்ற இயக்குனர்  ஹரி. இவர் இயக்கும் படங்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் முதலில் 2002ஆம் ஆண்டில் ‘தமிழ்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

   

இதனை தொடர்ந்து சாமி, கோவில்,  பூஜை, சிங்கம்-3, சாமி 2 போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்டார். மேலும் கடந்த வருடம் நடிகர் அருண் விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‘யானை’ திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் ஹரி பிரபல தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை பிரீத்தா விஜயகுமாரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தற்பொழுது  இயக்குனர் ஹரி புதிதாக டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்த திறப்பு விழாவில் ஹரியின் மனைவி, மாமனார் விஜயகுமார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும், திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இத்திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..