தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மணி ரத்னம்.
இவர் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்பிரமணியம் இவர் ஜூன் ஆம் தேதி 1956-ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
இவர் மதுரையைச் சார்ந்தவர். இவர் தந்தை கோபால ரத்தினம் இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.
இயக்குனர் மணி ரத்னம் சென்னையில் வளர்ந்தார். தன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் commerce இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் மேல்நிலைப் படிப்பிற்காக மும்பையில் உள்ள ஜம்னலால் பஜாஜ் மேல்நிலைக் கல்லூரியில் மாஸ்டர் டிகிரி மேனேஜ்மென்ட் பயின்றார்.
அதன் பின் சென்னையில் சிறிது காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். சிறுவயதில் பாலச்சந்திரனின் படங்களை பார்த்து அவரது ரசிகராக மாறியுள்ளார்.
இவர் தமிழில் 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெற்றி படமாக அமைந்தது.
இவர் இயக்கிய நாயகன், ரோஜா, பம்பாய் ,உயிரே போன்ற படங்கள் மக்கள் மந்தியில் நல்ல வரவேற்பு இருந்தது .
இவர் தமிழில் இதய கோவில் ,பகல் நிலவு ,நாயகன், அஞ்சலி, தளபதி செக்கச் சிவந்த வானம், கடல், குரு, ஆயுத எழுத்து போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
இவர் ஆறு தேசிய விருதுகளும் ஆறு தென்னிந்திய பின்பு விருதுகளும் மூன்று பாலிவுட் விருதுகளும் பெற்றுள்ளார்.
தற்போது 2022 ஆம் ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படமானது உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது இப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் நடிகை சுகாசினியை 1988 இல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நந்தன் என்ற மகனும் உள்ளார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் ‘சுகாசினி மணிரத்தினத்திற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?’ என்று ஆச்சரியதுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.