பிரபல திரைப்பட இயக்குனர் ராஜீவ் மேனனின் மகளா இது?… இப்படியொரு திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளாரா?… 

சில கலைஞர்கள் குறைவான திரைப்படங்கள் கொடுத்திருந்தாலும் அவர்களின் தனித்துவம் பலரின் கண்களில் பட்டு மின்னிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ராஜீவ் மேனன், ஆரம்ப காலங்களில் ஆவணப்படங்கள் எடுத்து பின் ஒளிப்பதிவாளராக திரையில் கால் வைத்தார். தமிழ் மட்டுமின்றிதெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் அறியப்படும் கலைஞன் ராஜீவ் மேனன்.

   

இவர் 1997ம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமியை வைத்து மின்சார கனவு என்ற திரைப்படத்தை முதன்முறையாக இயக்கியிருந்தார்.இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வெண்ணிவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா” பாடல் பாடாத நபர்கள் இல்லை. அவரின் அடுத்த படைப்பான “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”
ஒரு வித்தியாசமான படைப்பு என்றே சொல்லலாம்.

மெல்லிய திரைக்கதை, அழகான பாடல்கள் என அந்த திரைப்படம் செம ஹிட் அடித்தது. “இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்”என அஜீத் கேட்ட குரல் இன்னும் காதில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் திரையுலகை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 2019ம் ஆண்டு ‘சர்வம் தாராளமயம்’ திரைப்படத்தை இயக்கினார்.

கல்யாணி என்பவரை திருமணம் செய்துகொண்ட ராஜீவ் மேனனுக்கு சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மகள் சரஸ்வதி சினிமாவில் நாயகியாக களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர் வசந்த் ரவி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதையில் தான் சரஸ்வதி மேனன் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது தீயாய் பரவி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்…