என்னங்கடா சொல்றீங்க…? நான் தான் அமித்ஷா… இயக்குனர் சந்தான பாரதி அதிரடி பேட்டி…!

இயக்குனர் சந்தான பாரதி உலக நாயகனின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படங்களான மகாநதி, குணா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்களை இயக்கியவர். மேலும், பல திரைப்படங்களை இயக்கியதோடு சில திரைப்படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே பெயர் பெற்றவர்.

   

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வரும் இவர், உலகநாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர். அவரின் பல திரைப்படங்களில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விடுவார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, பாஜகவினருக்கு அமித்ஷா யார் என்று கூட தெரியவில்லை. என் புகைப்படத்தை போஸ்டரில் அடித்து, “அமித்ஷா அவர்களே வருக வருக” என்று குறிப்பிட்டிருந்தனர் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.