இயக்குனர் செல்வராகவனுக்கு இவ்ளோ பெரிய மகள் உள்ளாரா?… பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே…

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

   

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை சோனியா அகர்வால் காதல் திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது மூன்று குழந்தைக்கு தந்தையாக உள்ளார். தற்பொழுது இணையத்தில் இயக்குனர் செல்வராகவனின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி  வைரலாகி வருகிறது.

அதாவது NAC ஜூவல்லர்ஸ் இன் நகைகளை தாங்கள் நான்கு தலைமுறைகளாக அணிந்து வருவதாக அந்த நிறுவனத்துக்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த போட்டோஷூட் புகைப்படத்தில் இயக்குனர் செல்வராகவனின் மகளை  பார்த்த ரசிகர்கள் ‘உங்க மகள் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.