
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் கோட் படத்தின் VFX காட்சிகளை அமைக்கும் பணியில் VFX குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் ஏற்கனவே ஹாலிவுட் படங்கள் அவதார், கேப்டன் மார்வெல், எண்ட் கேம், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களுக்கு VFX செய்துள்ளனர்.
கோட் படத்திற்கான VFX காட்சிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனத்தினர் கோலிவுடிலும் தடம் பதிக்கின்றனர்.
இந்த நிலையில் கோட் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு ஒரு முக்கிய VFX காட்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Successfully completed the VFX work with @actorvijay na at @lolavfx can’t wait for the output!!! #TheGreatestOfAllTime #TheGOAT #aVPhero @archanakalpathi @aishkalpathi @hariharalorven pic.twitter.com/6BL29XOoXK
— venkat prabhu (@vp_offl) May 18, 2024