
‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வளம் வந்து கொண்டுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக தனுஷ் உடன் இவரது கூட்டணியில் அமைந்த படங்கள் அனைத்தும் தாறுமாறான வெற்றியை பெற்றது. இவர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவ கதைகள் என ரசிகர்கள் வியந்து பார்க்கும் படங்களை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் பல விருதுகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய இயக்கத்தில் தற்பொழுது ‘விடுதலை’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதோடு அவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். சமீபகாலமாகவே பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் அக்கா மற்றும் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பலரும் பார்த்திடாத அந்த புகைப்படம் இதோ…