சின்ன மீனை போட்டு சுறா மீனை துக்கிய ‘மஞ்சுமெல் பாய்ஸ்’..வாரி குவிக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா?..

மலையாளத் திரை உலகில் மாபெரும் சாதனை படைத்து வரும் படம் தான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படம் தென்னிந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படமானது தமிழகத்திலும் உண்மையாகவே நடந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார்.

   

இப்படத்தில் கமலஹாசன் நடித்த ‘குணா’ படத்தை ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துடன் இணைந்து அவர்  செய்த மேஜிக் வேற லெவலில் திரையரங்குகளில் ஒர்கவுட் ஆனது.இப்படத்தை பார்த்துவிட்டு, மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் நடிகர் கமல் ஹாசன்.

மேலும்  உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்றவர்கள் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ இயக்குனரை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.இப்படமானது இதுவரை உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 17.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவே தமிழ்நாட்டின் அதிகம் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது.