‘குருவி’ திரைப்படத்தில் நடித்த இந்தப் பெண் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?… அடடே இவர் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் தற்போது நடிக்கின்றாரா?….

தமிழ் சினிமாவில் ‘வீர நடை’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாதிகா.  இதைத் தொடர்ந்து ரோஜாவனம், ராமச்சந்திரன், சமஸ்தானம், ஆனந்தம் என பல திரைப்படங்களில் நடித்தார். கொஞ்சம் வளர்ந்ததும் தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களின் படத்தில் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

   

நடிகர் விஜயுடன் ‘குருவி’ திரைப்படத்திலும், ‘மாசிலாமணி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்பொழுது வரை கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் தனது திரை பயணத்தின் ஆரம்பத்தில் சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

இவரது குரலுக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்குடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஏஞ்சலினா என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் நடித்த ‘என் வீடு முற்றத்தில் ஒரு மாமரம்’ என்ற திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சாதிகா.

இவர் அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்துக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.