பிரபல நடிகையான காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.
இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. தனது மகனுக்கு நீல் என்று வைத்துள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் அவற்றை பகிர்ந்து இவர் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சிறு வயதிலேயே இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்….