90s களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் விசித்ரா. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தந்தை ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்பவர்.விசித்ரா படிக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. .1992 ஆம் ஆண்டு வெளியான ‘சின்ன தாயே’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் தலைவாசல் ,தேவர் மகன், எங்கள் முரளி, ரசிகன், ஆத்மா, வீரா, முத்து, வில்லாதி வில்லன், அசுரன், பெரிய குடும்பம் ,எட்டுப்பட்டி ராசா ,போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
.இவர் சினிமா நடிப்பை தாண்டி சீரியலும் நடித்துள்ளார். மாமி சின்ன மாமி ,வாழ்க்கை ,ராசாத்தி என்ற சீரியலும்’ கீதா கோவிந்தம்’ தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளியில்’ போட்டியாளராக கலந்து கொண்டார் .நடிகை விசித்ரா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார்.
தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் நான் சின்ன சின்ன படங்களில் நடித்த போது அந்த படங்கள் எனக்கு ஹிட் அடித்தது இதை தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அப்படி பிரபுவின் பெரிய குடும்பத்தில் நடிக்க நான் கம்மிட் ஆனேன் ஆனால் பூஜையை நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் வீட்டில் நடந்தது,
அப்போது அங்கிருந்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்னை அழைத்தார் உனக்கும் கவுண்டமணிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார். நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறினேன். இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி என்னை அவரிடம் அழைத்து சென்றது. அப்போது கவுண்டமணிக்கு வணக்கம் சொல் என்று கே எஸ் ரவிக்குமார் என்னிடம் சொன்னார். நான் வணக்கம் சார் என்றேன் அவ்வளவு பிரச்சினை முடிந்து விட்டது என்று அழைத்துச் சென்றார்.
அப்புறம்தான் எனக்கு தெரிந்தது நான் நடிகர் கவுண்டமணிக்கு வணக்கம் வணக்கம் சொல்லவில்லையாம் ஆதனால் தான் அதற்காக என்னை திமிரு புடிச்ச பொண்ணு என்று கூறி என் உடன் வேலை செய்ய மாட்டேன் என்று பெரிய ரகளை செய்து விட்டார் இந்த செய்தியானது இணையத்தில் வருகிறது. கவுண்டமணி அதற்கு என்னை திரும்பி திரும்பி பிடிச்ச பொண்ணு என்று கூறி என்னுடன் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.