‘தாமிரபரணி பட நடிகை பானுவை ஞாபகம் இருக்கா?.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…..

தாமிரபரணி படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில்  அறிமுகமானவர் நடிகை பானு. இவர் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இப்படத்தின் மூலம் மக்கள் மனதில்  நீங்கா இடம் பிடித்தார் . இதை தொடர்ந்து  ‘அழகர் மலை’ ‘மூன்று பேர் மூன்று காதல்’ போண்ற  சில படங்களில் நடித்திருந்தார்.அந்த  படங்கள்  மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

   

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக  வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று பின் தங்கினார் .இதை தொடர்ந்து மலையாள திரைப்படத்தில் தன் கவனத்தை செலுத்தி வந்தார்.இவர் இயற்பெயர் எல்லா ஜார்ஜ்.  தமிழ் திரைப்படத்திற்கு பானு என்றும், மலையாளத் திரைப்படத்திற்கு முக்தா ஜார்ஜ் என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.

இவர் தற்போது ‘சரவணனும் வாசுவும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து’ பாம்பு சட்டை படத்தில்’ பாபி  சிம்ஹாவுக்கு அன்னியாக நடித்திருந்தார்.மலையாள சினிமாவில் பிரபல பாடகியும் ,தொகுப்பாளினியான   ரிமி டோனியின் சகோதரர்  ரிங்கு டோனியை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பானு திருமணம் ஆனாலும் சினிமாவில் முழுமையாக ஒதுக்காமல் நடித்து வருகிறார்.இவர் நடிகை மட்டும் அல்ல  ஒரு கிளாசிக் டான்சரும் கூட .மேடையில் ஆடி பல பாராட்டும் விருதும் பெற்றிருக்கிறார்.பானு சொந்தமாக பியூட்டி பார்லர் ஒன்று வைத்துள்ளார். படம் இல்லாத நேரத்தில் பிஸினஸில் தனது முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.