கரு களைப்பு தப்பியோட்டம்..!அதிரடியாய் கைது.? செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்..!!

தமிழ் மொழியில் மட்டும்’ பிக் பாஸ்’ ஒளிபரப்பாகாமல் பல்வேறு மொழிகளில் பல்வேறு மாநிலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது. அதில் மலையாள பிக் பாஸில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷியாஸ் .தற்போது இவர் மீது 32 வயதான ஜிம் பயிற்சியாளர் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

   

அதில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ஷியாஸ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னிடம் இருந்து ரூபாய் 11 லட்சம் மோசடி செய்ததாகவும் அந்த பெண் புகாரியில் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஷியாஸ் தன்னுடன் உறவின் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.   எர்ணாகுளம் மற்றும் மூணாறில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை எடுத்து தன் தான் கர்ப்பமாக இருப்பதை கூறிய போது அவர் கருகளைப்பு செய்ய வற்புறுத்துகிறார் என்று அந்தப் பெண் போலீசாரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்.ஷியாஸ் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, தான் அவரிடம் ஏமாந்த அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண்ணின் புகாரை அடுத்து ஷியாஸ் கரீம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஷியாஸ், சுங்கத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து சென்னை சுங்கத்துறையினர் கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஷியாஸை கைது செய்தனர்.