சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கினார்.
மக்கள் மனதில் இடம் பிடித்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்தார். அவரது எதார்த்தமான நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது.
கடந்த வருடம் எதிர்பாராதவிதமாக மாரடைப்பு காரணமாக மாரிமுத்து உயிரிழந்தார்.
இதனால் கதை பின்னடைவு அடைந்தது. அவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர். சிலர் என்ன இருந்தாலும் மாரிமுத்து கதாபாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாது என கமெண்ட் செய்தனர்.
இந்த சீரியலில் பெண்கள் நாள்தோறும் சந்திக்கும் கஷ்டங்களை மையமாக வைத்து கதைக்களம் உருவானது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருந்தது.
இதில் கனிகா, ஹரிப்ரியா, மதுமிதா, பிரியதர்ஷினி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்தது.
அதனை நினைத்து ரசிகர்களும் நடிகர்களும் சோகமடைந்தனர். சீரியலின் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சி நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் கடைசி நாளில் எதிர்நீச்சல் குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.