
எதிர்நீச்சல் ஜனனி
சன் டிவியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜனனி கதாபாத்திரத்தில், தொடரின் நாயகியாக மதுமிதா நடித்துள்ளார். இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில்ஆதிகுணசேகரனின் வீட்டு கடைசி மருமகளாக நடித்துவரும் ஜனனியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் மதுமிதா கன்னட நடிகையாக நான்கு ஆண்டுகள் நடித்த பின், அவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருந்ததால், இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் எதிர்நீச்சல் தொடர். ஜனனி சீரியலில் எப்போதும் புடவையுடனும், சுடிதாருடனும் நடித்திருப்பார். இதை பார்த்துப் பழகிய ரசிகர்கள் இவர் மாடர்ன் உடையில் உள்ள புகைப்படத்தை பார்த்து, இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ, நீங்களே பாருங்கள்.