பொங்கி எழுந்த ஜனனி…. போட்டுத்தள்ள துடிக்கும் கதிர்… பரபரப்பு ப்ரோமோ…!!!

எதிர்நீச்சல் தொடரின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் எதிர்பார்ப்போடு இந்த தொடரை பார்த்து வருகிறார்கள். இத்தொடரில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

   

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், ஈஸ்வரி ஜனனியின் தந்தையிடம் “உங்க விருப்பப்படி திருமணம் செஞ்சதால  படாத பாடு பட்டுக்கிட்டிருக்கா ஜனனி. அவகிட்ட நீ பெய்லியர்ங்குறீங்க, இது நியாயமா? என்று ஆவேசத்துடன் கேட்கிறார்.

இதற்கு பதில் கூற முடியாமல் அவர் அப்படியே திகைத்து நிற்கிறார். மறுபுறம், ஞானத்திடம் அவர் கூறுவதை எந்த பிசிருமில்லாம நான் செய்வேன் என்று கூறுகிறார். பக்கத்தில் இருக்கும் கரிகாலன் அப்பத்தாவை கொலை பண்ணனுமா? என்று கேட்டதும், கதிரும், ஞானமும் ஷாக் ஆகிறார்கள்.

தன் அப்பாவிடம் ஜனனி, எந்த சக்தியை திருமணம் செய்து நான் தோற்றுப் போயிட்டேன் என்று நீங்க சொல்றீங்களோ அதே சக்திக்கூட சேர்ந்து நான் ஜெயிக்க போறேன் என்று கூறுவிட்டு செல்கிறார். இந்த ப்ரோமோ தற்போது மக்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.