சக மனிதர்கள் மற்றும் ஏர்போர்ட் ஊழியர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட நடிகர் அஜித்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் தந்தை பி சுப்பிரமணியன் தாய் மோகினி. நடிகர் அஜித்குமார் ஹைதராபாத் சேர்ந்தவர் . தொடக்க காலங்களில் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் வீடு என் கணவன்’ என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து இவர் 1993 ஆம் ஆண்டு வெளியான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

இவர் ‘பவித்ரா’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.  தமிழில் காதல் கோட்டை, வாலி , அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், வரலாறு, கிரீடம் ,மங்காத்தா ,விசுவாசம் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் ‘துணிவு’ .இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழி படங்களின் நடித்துள்ளார் .இவர்  நடிகர் மட்டும் அல்ல ஒரு நல்ல மோட்டார் பந்தய வீரரும்கூட. வரலாறு ,வில்லன், வாலி போன்ற படங்களுக்காக விருந்துகளை  பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய உலக டூரின் முதற்கட்டத்தை நிறைவு செய்தார். ஏகே மோட்டோ ரைடு’ என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தற்போது இவர் ஏர்போர்ட் செல்லும்போது தனது ரசிகர்கள் மற்றும் சக மனிதர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.