தியேட்டரில் டிக்கெட் விற்ற பிரபல நடிகை… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்… இது நல்ல ஐடியாவா இருக்கே…

தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். நடிக்க வந்த புதிதில் குடும்ப பங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார். போகப் போக அவர் ஹாட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்து இணையத்தை திணறச் செய்து வருகிறார்.

டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் செம வைரல் ஆனது. ஒரு நாள் கூத்து திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அவருக்கு தோல்வியே கிடைத்தது.

இதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்தினார். அங்கு அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சித்ரலகிரி, அலவைகுண்ட பிரமுலு போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன.

இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் பிரபல நடிகையாக நிவேதா பெத்துராஜ் தற்போது வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது.

இதை தொடர்ந்து தற்பொழுது ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் பெத்துராஜ். இதற்காக அவரும் திரைப்படத்தின் ஹீரோவும் இணைந்து திரையரங்கில் டிக்கெட் விற்பனை செய்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் ஓடோடி வந்து கூட்டம் கூட்டமாக டிக்கெட் வாங்கியுள்ளன.ர் ஒரு சில நிமிடங்களிலேயே கலெக்ஷன் கல்லா கட்டி விட்டதாம்.