
இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘பிக் பாஸ்’.
இந்நிகழ்ச்சியானது சீசன் 6 முடிவடைந்த நிலையில் ‘பிக் பாஸ் சீசன் 4’ போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தொகுப்பாளனி அனிதா சம்பத். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் சென்னையுள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு அண்ணா யுனிவர்சிட்டியில் B.Tech Electrical and Computer Engineering படித்தார். அதைத் தொடர்ந்து இவர் நியூஸ் 7 தொலைக்காட்சியிலும் பாலிமர் டிவியிலும் தொகுப்பாளனியாக பணியாற்றினார். அதன் பிறகு சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.
இதன் மூலம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சில் கலந்து கொண்டார்.அதன் பிறகு ‘சர்க்கார்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தர்பார், இரும்பு மனிதன், காலா, காப்பான், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ‘அவசரம்’ என்ற வெப் சீரியசிலும் நடித்துள்ளார்.பிக் பாஸுக்கு பிறகு அனிதா சம்பத் சொந்தமாக youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.
நடிகை அனிதா சம்பத் பிரபா கரன் என்பவரை காதலித்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் வயதில் திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram