சினிமாவில் தந்தை, மகன் என இரண்டு பேருடனும் ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்த பிரபல சகோதரி நடிகைகள்… யார் தெரியுமா?… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவில் முதன்முறையாக அப்பா மற்றும் மகனுடன் இணைந்து ஜோடியாக நடித்து ஹிட் திரைப்படங்களை கொடுத்த இரண்டு சகோதரி நடிகைகள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

நடிகை அம்பிகா மற்றும் நடிகை நாதா ராதா இவர்களைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. இவர்கள் திரையுலகில் அவ்வளவு பிரபலமானவர்கள். நடிகை அம்பிகாவும் ராதாவும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதை நாம் அறிவோம். இவர்களில் நடிகை ராதா பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

   

இத்திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ராதா மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்பாவுடன் நடித்த ராதா, அதாவது சிவாஜி கணேசன் உடன் நடித்த ராதா அவரது மகனான பிரபு உடனும் இணைந்து நடித்துள்ளார்.

இவர் ‘அண்ணா நகர் முதல் தெரு’ என்ற திரைப்படத்தில் பிரபுவுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே நடிகை அம்பிகாவும் பிரபல நடிகையாக திரையுலகில் வலம் வந்தவர் நடிகை அம்பிகா சிவாஜியுடன் இணைந்து ‘வாழ்க்கை’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ராதாவை போலவே, அம்பிகாவும் சிவாஜியின் மகனான பிரபு உடன் இணைந்து நடித்துள்ளார். நடிகை அம்பிகா தலைமகன், வெள்ளை ரோஜா போன்ற திரைப்படங்களில் நடிகர் பிரபு உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.