வெளிநாட்டில் ஜோடியாக சுற்றி திரியும் பிரபல நட்சத்திரங்கள்… சிக்கிய புகைப்படம்… இது உண்மையா?… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…

பிரபல நட்சத்திரங்களான ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் இணைந்து வெளிநாட்டில் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மிஷன் மஜ்னு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் விஜய் தேவர்கொண்டா இவர் நடிப்பில் இறுதியாக ‘லைகர்’ திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வரை இவர் எந்த பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

   

நடிகை ராஸ்மிகா மந்த்னா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி இருவரும் இதுவரை எந்த பேட்டியும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை.

சமீபத்தில் இருவரும் ஒரே மாதிரி கூலிங் கிளாஸை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அதனை உறுதி செய்யும் வகையில் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர்கள் இருவரும் ஒரே நீச்சல் குளத்தில் இருக்கும் இரண்டு வெவ்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அப்படி என்றால் நீங்கள் இருவரும் காதலிப்பது உண்மைதானா?’ என்று கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….