நடிகர் சியான் விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு… மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட படக்குழு…

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் சூப்பர் ஹிட் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் விக்ரம். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதாகியது.

   

சமீபத்தில் கூட விக்ரம் பிறந்தநாள் அன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பில் விக்ரமுக்கு அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 118 நாட்கள் நடைபெற்று முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பட குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கென தற்போது மகிழ்ச்சியுடன் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இயக்குநர் பா. ரஞ்சித், கதையின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி மாளவிகா மோகனன் ஆகிய மூவரும் வித்தியாசமான வண்ண கண்ணாடியில் இருப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்கலான் படத்தை ஆஸ்கார் போட்டிக்கும், கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். படப்பிடிப்பின் நிறைவையொட்டி படக்குழுவினரின் மகிழ்ச்சியான வீடியோ இதோ…