
கே.பாக்யராஜ் பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக வேலை பார்த்தார். சினிமாவில் முக்கிய இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் கே.பாக்யராஜ். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் கே.பாக்யராஜ் நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
அஸ்வினி இணைந்து நடித்த திரைப்படத்தில் கே.பாக்யராஜ் வாய் பேச இயலாத ஊமை கதாநாயகனாக நடித்தார். விடியும் வரை காத்திரு திரைப்படத்தை பாக்யராஜ் இயக்கி நடித்து வெற்றியை கைப்பற்றினார். முதலாவதாக பாக்யராஜ் நடிகை பிரவீணாவை காதலித்து கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரவீணா தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தில் அறிமுகமானார். அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பாமா ருக்மணி, ஜம்பு ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த 1983-ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பிரவீணா உயிரிழந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 25. அதன் பிறகு டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜின் மகன் சாந்தனுவும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.