பிரசவ வலி தொடங்கியது முதல்… குழந்தை பிறந்தது வரை… அனைத்தையும் வீடியோவாக வெளியிட்ட சீரியல் நடிகை அனு… மனதை கலங்கவைத்த எமோஷனல் வீடியோ உள்ளே…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை அனு. இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் விஜய், சன் தொலைக்காட்சி மட்டுமின்றி  ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சீரியல்களில் நடித்துள்ளார்.

   

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘மெல்லத் திறந்து கதவு’ என்னும் சீரியலில் நடித்துள்ளார். நடிகை அனு நிஜ வாழ்க்கையில் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனு சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் பதிவு செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்தார்.இந்நிலையில், நடிகை அனுவுக்கு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை நலமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தனது இணையதள பக்கத்தில் இவர் தெரிவித்திருந்தார்.

தற்பொழுது அவர் பிரசவ வலி தொடங்கியது முதல் குழந்தையை பெற்றெடுத்தது வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களின் மனதையும் கண்களையும் கலங்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Anu ???? (@anu_vignesh_)