
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரது மனைவி நடிகை ராதிகா வெளியிட்ட பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார். இவர் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சரத்குமார் 2005இல் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள்.சரத்குமாருக்கும் நடிகை ராதிகாவுக்கும் பிறந்தவர்தான் ராகுல் சரத்குமார். இவர் சமீபத்தில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ராதிகா.இவர் தற்பொழுது தனது கணவர் சரத்குமாரின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கூறி அழகிய பதிவொன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அவரின் பதிவு…
View this post on Instagram