அச்சு அசலாய் நடிகை ரேகாவை போலவே இருக்கும் அவரது மகளை பார்த்திருக்கீங்களா?… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ இதோ…

நடிகை ரேகா தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான வீடியோ ஒன்றை தற்பொழுது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கானா என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சமீபத்தில் வெளிவந்த பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியலும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

இந்நிலையில் நடிகை ரேகா தனது சொந்த மகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவரது மகளை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலாய் நடிகை ரேகாவை போலவே இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….

 

View this post on Instagram

 

A post shared by Murugesh P (@murugeshmakeup_hair)