நட்சத்திர ஜோடி சரத்குமார் – ராதிகாவின் மகனை பார்த்திருக்கீங்களா?… வருங்கால  ஹீரோ ரெடி… வைரலாகும் புகைப்படம் இதோ…

நட்சத்திர ஜோடிகளாக விளக்கும் சரத்குமார் ராதிகா தம்பதியினரின் மகன் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது இவர் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சரத்குமார் 2005இல் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். சரத்குமாருக்கும் நடிகை ராதிகாவுக்கும் பிறந்தவர்தான் ராகுல் சரத்குமார். இவர் சமீபத்தில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தங்களது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தையும், வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம சரத்குமார் ராதிகாவின் மகனா இது? வருங்கால ஹீரோ ரெடி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ….