
நடிகை சிம்ரன் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90களில் பிறகு கனவு கனியாக வலம் வந்த இவர் தற்பொழுது தனக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.
நடிகை சிம்ரன் பஞ்சாபைச் சேர்ந்தவர். இவர் மம்மூட்டி நடித்த ‘எதிரும் புதிரும்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி திரையுலகில் அறிமுகமானார். இன்றளவிலும் கதாநாயகிகளில் சிம்ரனை போல டான்ஸ் ஆடுபவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது ஸ்டைலான டான்ஸ் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சை கொள்ளையடித்துள்ளார் நடிகை சிம்ரன்.
இவர் டான்ஸ் மட்டுமின்றி, குடும்ப பங்கான கதாபாத்திரம் முதல் கவர்ச்சி கதாபாத்திரம் வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ஒரு கலக்கு கலக்கினார் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோயின்களின் வரிசையில் இடம் பிடித்தார். தொடர்ந்து சிம்ரன் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் மகான், கேப்டன், ராக்கெட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் துருவ நட்சத்திரம், வணங்க முடி, அந்தகன் என பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை சிம்ரன் 2003ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த அழகான ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த அழகிய புகைப்படம்…