மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக்கின் பூர்வீக வீட்டை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

மறைந்த காமெடி நடிகர் விவேக்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தன்னுடைய ஒவ்வொரு காமெடி மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இன்றி சிந்திக்கவும் வைத்தவர். திடீர் மாரடைப்பு காரணமாக இவர், இந்த உலகை விட்டு மறைந்தாலும், ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் நிலைத்து நிற்கிறார்.

   

நடிகர் விவேக்கை ஒரு காமெடியனாக நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனராகும் லட்சியத்தோடு தான் சினிமாவிற்கு வந்தார். அதே போல் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ என்கிற படத்தில், எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

நடிகர் விவேக் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு டப்பிங் மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பைத் தாண்டி மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்த  மிராண்டா மற்றும் பிரபல நகை நிறுவனம் ஒன்றிலும் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விவேக் இருந்துள்ளார்.

நடிகர் விவேக், தமிழில் வெளியான ரன், சாமி, மற்றும் பேரழகன் ஆகிய 3 படங்களுக்காக சிறந்த காமெடி நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

அதே போல் விவேக்கின் நடிப்பில் வெளிவந்த ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ஆகிய ஐந்து படங்களுக்காக சிறந்த காமெடியனுக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு இவருக்குப் கிடைத்தது.

இவர் தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய 100வது திரைப்படம் என்றால் நடிகர் பிரபு, ரோஜா நடிப்பில் வெளியான ‘சூப்பர் குடும்பம் திரைப்படம்’ தான்.

அதே போல் இவரது 200வது திரைப்படம் என்றால் அது நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்திருந்த ‘சிங்கம் 2’ திரைப்படம்.

இவர் கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் விவேக்கின் சொந்த கிராமத்தில் உள்ள அவரது சமாதி மற்றும் பூர்வீக வீட்டின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்புகைப்படங்களை கல்வெட்டு ஆய்வாளர் கி. ச. முனிராஜ் வாணாதிராயன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்பொழுது ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு….