‘கலக்கப்போவது யாரு’ TSK வின் மகளை பார்த்திருக்கீங்களா?… எவ்வளவு க்யூட்டா இருக்காங்க… நீங்களே பாருங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘கலக்கப்போவது யாரு’. இந்தநிகழ்ச்சிக்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது என்றே கூறலாம். காமெடிக்கு பிரபலமான இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்  பிரபலமானவர் TSK. அதாவது டிஎஸ்கே என்கிற திருச்சி சரவண குமார்.

   

இவர் தற்பொழுது சின்ன திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் டிஎஸ்கேவும் அசாரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையில்  மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

கலக்கப்போவது யாரு சீசன் 8 டைட்டிலை வென்றுள்ள இவர் தற்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகின்றார். இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘எவ்வளவு க்யூட்டா இருக்காங்க?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…