தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜயகுமார். நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதி அந்தளவுக்கு அழகுதான். படங்களில் நடிக்கும் போது கூட இருவரின் நடிப்பும் இயல்பாகவே இருக்கும். மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் போதே விஜயகுமாரை மஞ்சுளா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜயகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, மகள்கள், மகன் உள்ளிட்டோர் இருந்தனர். இவரது குடும்பத்தினர் அனைவருமே இளமையான தோற்றத்திலேயே இருப்பார்கள். அதிலும் 70 வயதுக்கு மேல் ஆகும் விஜயகுமாரை கேட்கவே வேண்டாம். இப்போது கூட ஹீரோ சான்ஸ் கொடுக்கலாம் அந்த அளவிற்கு இளமையாக உள்ளார்.
பொதுவாகவே இளமையாக இருக்க கவலை ஏதும் இருக்கக் கூடாது. மஞ்சுளா இறந்த போது விஜயகுமார் மிகவும் உடைந்து போயிருந்தார். விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணுவின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவர் தனது கணவருடன் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர். இவர் 50 நாட்கள் விடுப்பில் இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் புதிய வீட்டை வாங்கியுள்ளார்.
தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட அனிதா அண்மையில்தான் கத்தார் திரும்பினார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார். அதன் பெயர் கிரீன் ஸ்மூத்தி. இதை காலை நேரத்தில் அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் செலரி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, பார்ஸ்லே, பெர்ரிகள், இஞ்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அருந்தலாம்.
இவ்வாறு அனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்த கிரீன் ஸ்மூத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அத்துடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது. நார்ச்சத்து நிரம்பிய கிரீன் ஸ்மூத்தியை தயார் செய்ய கேல் அல்லது கீரை, செலரி, வாழைப்பழம் மற்றும் சியா விதைகளை பரிந்துரை செய்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். இதில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளதால் தொப்பையை குறைக்கும். குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் ஊளை சதையை குறைக்கும். பெருத்த தொந்தியை கூடசட்டுனு குறைத்துவிடும்.