‘இறுதிச்சுற்று’ பட நடிகை ரித்திகா சிங்யின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

   

இப்படத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர்,  காலி வெங்கட்,  ஜாகிர் உசேன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் எழிலரசி  என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை ரித்திகா சிங்.

இவர் தந்தை மோகன் சிங். சிறு வயதிலிருந்தே  கிக்பாக்ஸராகவும், ஒரு கலப்பு தற்காப்பு கலைஞராகவும் சிறுவயதிலிருந்தே தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றார்.

2009 ஆம் ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளில், 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை  வீராங்கனையாக அறிமுகமானார். அதன் பிறகு சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார்.இவர் டாஸி சிங், ஐரீன் கபெல்லோ ரிவேரா, அபே சாபர், மன்ஜித் கோலேகர்  போன்ற பல போட்டிகளில் கலந்துள்ளார்.

சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தில் சுதாகர் கொங்கர பிரசாத் ரித்திகா சிங்கை கண்டார். பின்னர் அவர் தனது இருமொழித் திரைப்படமான 2016 ஆண்டு வெளியான ‘சாலா கதூஸ்’ படத்தில்  முன்னணிப் பாத்திரத்தில்  நடித்தார்.

இவர் தமிழில் ஆண்டவன் கட்டளை,  சிவலிங்கா, வணங்காமுடி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப  புகைப்படங்கள்  சில இணையத்தில் வெளியாகியுள்ளது.