‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அப்துல் ஹமீது இறந்து விட்டாரா?… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரே வெளியிட்ட பேட்டி இதோ…

‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான தொகுப்பாளர் அப்துல் ஹமீது இறந்து விட்டதாக பரப்பப்பட்ட வதந்திக்கு தற்பொழுது அவர் பேட்டி ஒன்றின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் போலவே வானொலி, மற்றும் டிவி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் வானொலி பிரபலம் அப்துல் ஹமீது ‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தவர். 80 மற்றும் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த நிகழ்ச்சி இருந்த முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’.

   

இலங்கையில் பிறந்த இவர் தனது ஆரம்ப காலத்தில் குடும்பம் வறுமையில் இருக்கும் பொழுதும் தனது திறமையால் வளர்ச்சி அடைந்தார். இப்பொழுது இவர் தொலைக்காட்சியில் வரவில்லை என்பதால் சிலர் இவர் இறந்து விட்டதாக பல செய்திகளை பரப்பி வந்தனர். இதனால் தற்பொழுது ஒரு பேட்டியை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அப்துல் ஹமீது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘காணொளியில் எங்களுடன் பணியாற்றிய சகோதரியின் கணவர் இறந்து விட்டார் அவர் பெயர் ஹமித். அவரது இந்த இறப்பு வானொலியில் பரவ எனது மனைவிக்கு வருத்தம் தெரிவித்து அனைவரும் மெசேஜ் அனுப்பினர்.

ஆனால் இறந்தது வேறொருவர் தான் பெயர் ஒன்றாக இருந்ததால் அனைவரும் குழம்பி விட்டனர்’. என்று கூறியுள்ளார். மேலும் இதுவரை அவர் இது போல் 3 முறை இறந்திருப்பதாகவும் இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.