நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? நடிகர் விமல்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரே வெளியிட்ட வைரல் வீடியோ இதோ…

நடிகர் விமலுக்கு நெஞ்சுவலி என்று சமூக வலைத்தளத்தில் வெளியான வதந்திக்கு தற்பொழுது அவர் முற்றுப்புள்ளி வைத்து வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விமல் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் ‘களவாணி’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

   

இப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல வெற்றியடைந்த திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வாகை சூடவா திரைப்படம் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.

சமீபத்தில் இவர் நடிப்பில் ‘விலங்கு’ வெப் சீரியஸ் ரிலீஸ் ஆனது இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விமல் அடுத்ததாக இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் ‘துடிக்கும் கரங்கள்’ என்ற திரைப்படத்திலும் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விமல் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல் தன் இணையதள பக்கத்தில் ‘நலமுடன் படபிடிப்பிலிருந்து’ என வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் வீடியோவில் அவர் தோன்றி ‘செய்தி கேட்டேன். எனக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி என்று அதெல்லாம் கிடையாது. நான் நலமாக இருக்கிறேன். புதுமனை இயக்குனர் மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் ஐந்து நாளில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

இன்னொரு செய்தி பார்த்தேன். நான் மதுவுக்கு அடிமையாகி விட்டு வீட்டில் ரகசிய சிகிச்சை என்று இதெல்லாம் பார்க்கும் பொழுது காமெடியாக உள்ளது. வேண்டாத விஷயத்தில் நீங்கள் இதுபோல பண்றாங்க. சின்ன பிள்ளைத்தனமான வேலைகளை விட்டுட்டு பொழைக்கிற வழியை பாருங்க. நீங்களும் வாழுங்க. மத்தவங்களையும் வாழ விடுங்க’ என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ…