தொகுப்பாளினி டிடி க்கு  மறுமணமா?… அவரது அக்கா பிரியதர்ஷினி என்ன சொன்னார் தெரியுமா?… வைரலாகும் தகவல் இதோ…

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உள்ளனர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவர் தனது உடல் நலக்குறைவால் தற்பொழுது முன்பு போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை.

   

ஒரு சில முன்னணி நடிகர்களின் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டும் பங்கு பெற்று வருகிறார். இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டுள்ளார். தொகுப்பாளினி டிடி குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது, இவர் திருமணமான சில வருடங்களிலேயே தனது கணவரை விவாகரத்து செய்தார்.

தற்பொழுது இவர் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகவும், அவர் கேரளாவில் வசிக்கும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்யப் போகிறார் என்றும் இணையத்தில் செய்திகள் வெளிவந்து வைரலாகி வந்தது. இது குறித்து சமீபத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினியிடம் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, ‘அவர் எனக்கு தெரியவில்லை இது குறித்து  டிடியிடம் கேட்டால் தான் தெரியும். இது போன்ற வதந்திகள் வருவது வழக்கம் தான். இது எங்களுக்கு பழகிவிட்டது’ என்று கூறி சென்றுள்ளார்.