இவங்க ஜாதகத்தில் இப்படி ஒரு தோஷமா.. அதான் கோவில் கோவிலா சுற்றி வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன்..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்ல பெயரால் அழைத்து வருகின்றனர்.தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து சிவாஜி,  வல்லவன், ஆரம்பம், கோலமாவு கோகிலா, அறம்,  விசுவாசம் ,  தர்பார், அண்ணாத்த போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.தற்போது நடிகை நயன்தாரா ‘9 ஸ்கின்’ என்ற சொந்த தொழில் ஒன்றை தொடங்கி உள்ளார்

இவர்  மண்ணாங்கட்டி, நயன்தாரா 75 ,டெஸ்ட் போன்ற பல படங்களில் நடிக்க உள்ளார். மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இவர்  தமிழில் இறுதியாக நடித்த படம் ஜவான். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய நடிகையாக  உருவெடுத்துள்ளார்.

வேலை விஷயத்தில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், தன்னுடைய இரு  குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரம் செலவிடவும் தவறுவது இல்லை.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நயன்தாரா பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இது குறித்த ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

அதில் நயன்தாராவின் ஜாதகத்தில் ஏற்கனவே சில தோஷம்  உள்ளது.  அதன் காரணமாகவே பல்வேறு பரிகாரங்கள் செய்து  தான்  நடிகை நயன்தாரா திருமணம் செய்துகொண்டார். இந்த தோஷத்தின் தாக்கம் கணவருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே இப்போது விசேஷ பூஜைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.