
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக் இவர் பிரபல முன்னணி நடிகரான கார்த்திக் மகன் ஆவார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது தமிழ் திரையுஉலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து இவர் வை ராஜா வை ,முத்துராமலிங்கம், ரங்கூன் ,இந்தி ரஜித், இருட்டு அறையில் முரட்டு குத்து ,தேவராட்டம் ,ஆனந்த விளையாட்டு ஆகஸ்ட் 16 1947 போன்ற படத்தில் நடித்துள்ளார்.தற்போது இவர் குற்றவாளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.நடிகர் கௌதம் கார்த்திக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கவுதம் கார்த்திக், மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தன்னுடைய பணத்தில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என, முடிவு செய்து மிகவும் எளிமையான முறையிலேயே இவர்களின் திருமணம் நடந்தது.குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.