படுகாயம் அடைந்த நடிகர் விஜய் ஆண்டனி ICUவில் உள்ளாரா?… தற்பொழுது அவரின் நிலை இதுதானா?… வருத்தத்தில் ரசிகர்கள்….

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் தற்பொழுது பல படங்களில் நடித்த வருகிறார். இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது.

   

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. விஜய் ஆண்டனிக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்பொழுது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் பல படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் அவர் செய்து வருகிறார். தற்பொழுது இவர் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தில் எடுக்கப்பட்ட ஸ்கூட்டர் ஓட்டும் ஸ்டென்ட் காட்சி ஒன்றில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த சமயத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்கூட்டர் போட்டில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவர் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். இதன் பின் ஒளிப்பதிவாளரின் துணை ஒளிப்பதிவாளர் ஒருவர்தான் தண்ணீருக்குள் குதித்து விஜய் ஆண்டனியை காப்பாற்றியுள்ளார். வெளியே வந்த விஜய் ஆண்டனி மூச்சு விடவே கஷ்டப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஐசியூவில் அனுமதித்துள்ளனர் படக்குழுவினர். முகத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது சிகிச்சைக்குப் பின்னர் நலமாக உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.