‘விடுதலை’ திரைப்பட ஹீரோ நடிகர் சூரியின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?… அம்மாடி தலையே சுத்துதே…

 

   

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு நல்ல காமெடி நடிகர் சூரி. இவர் காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்பொழுது கலக்கி வருகிறார். இவர் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது களமிறங்கியுள்ளார்.

அவரது காமெடி காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தற்பொழுது இவர் ஹீரோவாக நடித்த ‘விடுதலை’ திரைப்படம் நிறைவு பெற்றுள்ளது’. இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை ஆனா பென் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும்  மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து நடிகர் சூரி  கூழாங்கல் படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விடுதலை திரைப்படத்திற்க்காக நடிகர் சூரி வாங்கிய சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது திரைப்படம் ஆரம்பிக்கும் போது நடிகர் சூரிக்கு 30 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாம். ஆனால் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதினால் சூரியின் சம்பளத்தை 40 லட்சமாக உயர்த்தி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.